அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் இலங்கையை வந்தடைந்தார்

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் இன்றைய தினம் வியாழக்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மைக்கான ஆதரவு குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகளை சந்திப்பார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லும் அமெரிக்க விமானப்படை வீரர்களுக்கு, அமெரிக்கா தூதுவர் ஜூலி சங், அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.







