SuperTopAds

பல ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ள அமெரிக்கா- வெளியான காரணங்கள்..

ஆசிரியர் - Editor IV
பல ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ள அமெரிக்கா- வெளியான காரணங்கள்..

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டினரின் 85 ஆயிரம் விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகின்றார்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயலாளர் மார்கோ ரூபியோவும் ஒரு எளிய ஆணையைப் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றும் வரை அவர்கள் ஓயமாட்டார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 85 ஆயிரம் பேர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இதுமுந்தைய ஆண்டை விட 2 மடங்கு அதிகம்.

தாக்குதல்கள் மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களின் விசாக்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். இவை மட்டுமே கிட்டத்தட்ட பாதி விசா ரத்துகளுக்குக் காரணம் ஆகும்.

இவர்கள் நமது சமூகங்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பவர்கள். எனவே அவர்கள் நம் நாட்டில் இருக்க நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்கா வர விசாவுக்கு விண்ணபிப்பவர்களுக்கு அனுமதி வழங்க நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமோ எடுத்துக்கொள்வோம்.

Radio