இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க டொனால்டு டிரம்ப் முடிவு

இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வருவதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உச்சபட்ச வரியை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பால், அந்நாட்டை சார்ந்து வணிகம் மேற்கொண்டு வரும் இந்திய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது.
மேலும் இருநாடுகள் இடையேயான வர்த்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் இல்லாத நிலையில், இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக, விவசாய பொருட்களின் இறக்குமதிகள், குறிப்பாக கனடாவில் இருந்து இறக்குமதியாகும் உரங்கள் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளார்.
அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் நிதி உதவியை அறிவிப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் கூட்டம் நடைபெற்றது.




