இலங்கைக்கான நேரடி விமான சேவையை அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன
குறித்த சேவை 2026 ஓகஸ்ட் 25 ஆம் திகதி மெல்போர்னில் இருந்து இலங்கைக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த விடயத்தை ஜெட்ஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி டல்லி தெரிவித்துள்ளார்.
2026 ஓகஸ்ட் முதல் முறையாக மெல்போர்ன் முதல் கொழும்பு வரை மூன்று வாராந்த விமானங்களுடன் ஜெட்ஸ்டார் நிறுவனம் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அவுஸ்திரேலியாவின் ஒரே குறைந்த கட்டண சேவையை வழங்கும் நிறுவனமாகும். இதன்படி ஜெட்ஸ்டார் தனது முதல் தெற்காசியாவுக்கான சேவையாக, இலங்கைக்கு குறைந்த கட்டணத்தில் சேவையையும் தொடங்க உள்ளது.
இதனால் , ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தின் மெல்போர்ன் - கொழும்பு வழித்தடம் அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கைக்கு அதிக விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கான புதிய, நேரடி மற்றும் மலிவு விலை வழியை வழங்கும் என்று ஜெட்ஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி டல்லி கூறியுள்ளார்.




