SuperTopAds

கோவா இரவு விடுதியில் நள்ளிரவில் தீ விபத்து

ஆசிரியர் - Editor IV
கோவா இரவு விடுதியில் நள்ளிரவில் தீ விபத்து

கோவாவில் உள்ள இரவு விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குறித்த  விியம்  தொடர்பாக விடுதி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 கோவாவின் வடக்கு பகுதியில் அர்போரா கிராமத்தில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற பெயரில் பிரபல இரவு நேர கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது.

 சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விடுதி முழுவதும் பரவிய தீயைக் கண்டு உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

 இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 

இந்த விபத்தில் விடுதி ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 6 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் விடுதியின் சமையலறை ஊழியர்கள். இதில் மூன்று பெண்களும் அடங்குவர்.

 தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சம்பவ இடத்துக்கு விரைந்தார். ‘‘

5 சுற்றுலா பயணிகள், 20 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். தீக்காயம் அடைந்ததால் 3 பேரும், மற்றவர்கள் மூச்சு திணறியும் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Radio