SuperTopAds

வட அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆசிரியர் - Editor IV
வட அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் சனிக்கிழமை (06) ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

மேலும் அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் (Yukon) பிரதேசத்தின் எல்லையில் உள்ள இப்பிராந்தியத்தில், கடந்த 24 மணி நேரத்திற்குள் பல சிறியளவான தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு மத்தியில் இந்த பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதனால் மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Radio