SuperTopAds

இண்டிகோ விமான நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

ஆசிரியர் - Editor IV
இண்டிகோ விமான நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

புதிய அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்ப விமானப் பணியாளர்களின் பணி அட்டவணையில் போதுமான மாற்றங்களைச் செய்யத் தவறியதால், இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் இந்தியா முழுவதும் இந்த வாரம் நூற்றுக்கணக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக , பெங்களூரு, டெல்லி, மும்பை, சென்னை உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த மேதா க்ஷீர்சாகர் மற்றும் ஒடிசாவின் புவனேஷ்வரைச் சேர்ந்த சங்கமா தாஸ் ஆகிய மென்பொருள் பொறியியலாளர்கள், இண்டிகோ விமான இரத்து காரணமாகத் தங்கள் சொந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போன ஓர் எதிர்பாராத சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி புவனேஷ்வரில் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு, கடந்த டிசம்பர் 3ஆம் திகதி ஹூப்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.

விமானிகள் பற்றாக்குறை மற்றும் பணியிட நேர வரம்பு விதிமுறை மாற்றம் காரணமாக, டிசம்பர் 2 ஆம் திகதிக்கான இவர்களது விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி, இறுதியாக டிசம்பர் 3ஆம் திகதியன்று இரத்து செய்யப்பட்டன.

மேலும், டிசம்பர் 8ஆம் திகதி வரை கூடுதல் விமானங்கள் ரத்து செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதிக்குள் நிலைமை சீராகும் என்றும் இந்திய விமானப் போக்குவரத்து அதிகார சபையிடம் இண்டிகோ அறிவித்துள்ளது.

Radio