அனர்தத்ததால் பாதிக்கப்பட்ட பகுதியில் மின் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு

போவத்த - வீரபொக்குன பகுதியில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளார்.
மின்சார சபை ஊழியரான அனுருத்த குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான அவருக்கு உடனடியாக வீரபோகுன அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது.
பின்னர், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.




