SuperTopAds

பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இலங்கையில் தரையிறங்கியது

ஆசிரியர் - Editor II
பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இலங்கையில் தரையிறங்கியது

இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிய பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இன்றைய தினம் புதன்கிழமை இலங்கையை வந்தடைந்தது.

விமானத்தில் வந்திறங்கிய உதவிப் பொருட்களை இலங்கைக்கான பங்களாதேச உயர் ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ்  உத்தியோகபூர்வமாக கையளித்ததோடு பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் மயூரி பெரேரா உள்ளிட்ட குழுவினர் அதனை பொறுப்பேற்றனர்.

இந்தப் பொருட்களில் 1,000 நுளம்பு வலைகள், 500 உணவுப் பொதிகள், 10 கூடாரங்கள், 125 அவசர மருத்துவப் பெட்டிகள், பாதணி, கையுறைகள்,ஜெக்கட்டுகள், தலைக்கவசங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளதாகவும், இந்தப் உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.