SuperTopAds

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக நாடுகள் கைகோர்ப்பு ...

ஆசிரியர் - Editor IV
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக நாடுகள் கைகோர்ப்பு ...

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை அடுத்து இலங்கைக்கு தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான ஆதரவு கிடைத்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால், நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஒற்றுமையை வெளிப்படுத்தி அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

உடனடி அவசரகால மீட்பு முயற்சிகளில் இந்தியா முன்னணிப் பங்காற்றியுள்ளது. 

 இந்திய கடற்படை மற்றும் வான் படைகள் ஏற்கனவே அவசரகால பொருட்களை வழங்கியுள்ளன, மேலும் கூடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 உலக உணவுத் திட்டம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா என்பனவும் தமது பங்காற்றலை வெளிப்படுத்தியுள்ளன. 

 அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மாலைத்தீவுகள், சுவிட்ஸர்லாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவும் தமது உதவிகளை வழங்கி வருவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இதனைத் தவிர துருக்கி, கியூபா, பங்களாதேஸ், ஐரோப்பிய ஒன்றியம், பாலஸ்தீனம், நிகரகுவா மற்றும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio