SuperTopAds

கோவாவில் 90ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்

ஆசிரியர் - Editor IV
கோவாவில் 90ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்

கோவாவில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தத்தில் 90ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

கோவாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கோயல் கூறுகையில், ‘‘கடந்த 4ம் தேதி தொடக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகளின்படி கோவாவில் மொத்தம் 11,85,000 வாக்காளர் உள்ளனர்.

 தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட விரிவான சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவாக 10,55,000 படிவங்கள் நிரப்பப்பட்டு இந்த படிவங்களில் 96.5 சதவீதம் தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டுள்ளன.

Radio