SuperTopAds

காசாவில் போர் நிறுத்தம் அமலான நிலையில் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது

ஆசிரியர் - Editor IV
காசாவில் போர் நிறுத்தம் அமலான நிலையில் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது

காசாவில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகச் சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நீண்ட நாட்களாகக் கடுமையான போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. 

இருப்பினும், போர் நிறுத்தக் காலத்திலும் அவ்வப்போது நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் மீட்புப் பணிகள் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காசா சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் தொட்டுள்ளது.

 இன்நிலையில்  போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் மட்டும் 352 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

தற்போது போர் பதற்றம் சற்று தணிந்துள்ளதால், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் சமீபத்தில் கணக்கிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையில் பெரும்பகுதி, இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட உடல்கள் மூலமே உயர்ந்துள்ளது.

 தெற்கு காசாவில் நேற்று இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Radio