SuperTopAds

அனர்த்த நிவாரணத்திற்கு மேலும் 30 பில்லியன் ஒதுக்கீடு

ஆசிரியர் - Editor II
அனர்த்த நிவாரணத்திற்கு மேலும் 30 பில்லியன் ஒதுக்கீடு

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை சீற்றம் காரணமாக நாட்டில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை இன்னும் மோசமாகும் பட்சத்தில் சர்வதேச உதவிகளை நாடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

தொடர்ந்து பல பகுதிகளில் வெள்ள நிலைமை அசாதாரண நிலையை அடைவதாகவும் நீர் மட்டங்களின் நிலை அதிகரித்துவருவதால் விரைந்து செயற்படவேண்டும் 

பேரிடர் நிவாரண சேவைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 1.2 பில்லியன் (1200 மில்லியன்) ஒதுக்கியுள்ளது.

மேலும், அவசர தேவைகளுக்காக 2025 பட்ஜெட்டில் இருந்து மேலும் ரூ. 30 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப நிதியைக் கோருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து அரச  முகவர்களுக்கும் தொடர்ந்து நடைபெறும் ஒன்லைன் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் திறம்பட செயல்படுத்துமாறு ஜனாதிபதி மேலும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்

Radio