SuperTopAds

சீனாவின் யுனான் மாகாணத்தில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதியது - 11 பேர் பலி

ஆசிரியர் - Editor IV
சீனாவின் யுனான் மாகாணத்தில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதியது - 11 பேர் பலி

சீனாவின் யுனான் மாகாணத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

 லோயாங் ரயில் நிலையத்தில் தண்டவாள வளைவில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதி விபத்துகுள்ளானது. 

குறித்த ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்து இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று தென்மேற்கு சீனாவில் ரயில் ஒன்று ரயில்வே தொழிலாளர்கள் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். 

குன்மிங் நகரில் உள்ள லுயோயாங் டவுன் ரயில் நிலையத்திற்குள் ஒரு வளைந்த பகுதியில் தண்டவாளத்திற்குள் நுழைந்த தொழிலாளர்கள் மீது நில அதிர்வு உபகரணங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது ரயில் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Radio