SuperTopAds

இந்திய பெண்ணை கரம்பிடித்த ஜீவன் தொண்டமான்

ஆசிரியர் - Editor II
இந்திய பெண்ணை கரம்பிடித்த ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

இந்தியாவின் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளையே ஜீவன் தொண்டமான் கரம்பிடித்துள்ளார்.

இந்த திருமண நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


Radio