SuperTopAds

நீண்ட கால முட்டைக்கள்ளன் கைது - போதைப்பொருட்களை மீட்பு

ஆசிரியர் - Editor II
நீண்ட கால முட்டைக்கள்ளன் கைது - போதைப்பொருட்களை மீட்பு

நீண்ட காலமாக முட்டைகளை களவாடி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 3 ஆயிரத்து 120 களவாடப்பட்ட  முட்டைகளும், 2கிராம் 110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிவேரிய நகரில் உள்ள முட்டை வியாபார நிலையமொன்றில் இருந்து முட்டைகள் களவாடப்பட்டு வருவதாக , பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

விசாரணைகளின் போது, குறித்த முட்டைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி காணொளி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இரவில் முச்சக்கரவண்டியில் வந்து கடையில் முட்டைகளை களவாடி வந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Radio