SuperTopAds

முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம்

ஆசிரியர் - Editor II
முச்சக்கர வண்டிக்குள் காயங்களுடன் சடலம்

கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றினுள் இருந்து காயங்களுடன் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றினுள் நேற்று இரவு குறித்த சடலம்  மீட்கப்பட்டுள்ளது. 

குருநாகல் - கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio