SuperTopAds

AI குமிழி வெடிக்குமா? : சுந்தர் பிச்சையின் பகீர் எச்சரிக்கை

ஆசிரியர் - Editor IV
AI குமிழி வெடிக்குமா? : சுந்தர் பிச்சையின் பகீர் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) குமிழி வெடித்தால், Alphabet உட்பட ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்று அதன் தாய் நிறுவனமான கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை BBC செய்தி சேவைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். 

 செயற்கை நுண்ணறிவு மீதான முதலீட்டின் வளர்ச்சி ஒரு "அசாதாரண தருணம்" என்றாலும், தற்போதைய AI எழுச்சியில் சில "அறிவுக்குப் புறம்பான" கூறுகள் இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார். 

 சமீப மாதங்களாக AI தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு உச்சத்தை அடைந்துள்ளதாலும், இந்த வளர்ந்து வரும் துறையில் நிறுவனங்கள் பெரிய அளவில் செலவழிப்பதாலும், சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் பிற இடங்களிலும் ஒரு நிதி "குமிழி " பற்றிய அச்சங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தப் பேச்சு வெளிவந்துள்ளது. 

 AI குமிழி வெடித்தால் Google அதனால் பாதிக்கப்படாமல் இருக்குமா என்று கேட்கப்பட்டபோது, அந்தப் பெரிய புயலைத் தாங்கும் திறன் தங்கள் நிறுவனத்திற்கு இருந்தாலும், ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். 

 "நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் பாதிக்கப்படாமல் இருக்கப் போவதில்லை என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். 

 இருப்பினும், கூகிள் தனது சொந்த "முழு அடுக்கு" தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் தனித்துவமான மாதிரி, எந்தவொரு AI சந்தை கொந்தளிப்பையும் கடக்க சிறந்த நிலையில் இருப்பதாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

Radio