SuperTopAds

ஒன்றாரியோவில் மெகா பரிசு - வென்ற தொகையைக் கண்டு ஆச்சரியமடைந்த அதிர்ஷ்ட பெண்

ஆசிரியர் - Editor IV
ஒன்றாரியோவில் மெகா பரிசு - வென்ற தொகையைக் கண்டு ஆச்சரியமடைந்த அதிர்ஷ்ட பெண்

கனடாவில், ஒன்றாரியோ மாகாணத்தின் ஃபிட்ஸ்ராய் ஹார்பர் பகுதியில் வசிக்கும் ஷெல்லி எக்க்ஃபோர்ட், அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணப்பரிசினை வென்றுள்ளார். 

 கெட்ச் தி ஏஸ் (Catch the Ace) அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் குறித்த பெண் பரிசு வென்றுள்ளார். 

 ரஸ்ஸல் கின் கிளப் நடத்தும் இந்த அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் குறித்த பெண் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வென்றுள்ளார். 

 இந்நிலையில், "இதனை நான் இன்னும் நம்ப முடியவில்லை… மிகவும் சந்தோஷமாகவும், நன்றியுடனும் இருக்கிறேன்" எனக் குறித்த பெண் தெரிவித்துள்ளார். 

 இந்த சீட்டிழுப்பிற்காக 86,000ற்கும் மேற்பட்ட சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio