SuperTopAds

துப்பாக்கி சூட்டில் வயோதிப தம்பதி உயிரிழப்பு - தெற்கில் பயங்கரம்

ஆசிரியர் - Editor II
துப்பாக்கி சூட்டில் வயோதிப தம்பதி உயிரிழப்பு - தெற்கில் பயங்கரம்

அம்பாந்தோட்டை - தங்காலை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.

9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுடைய கணவன் மற்றும் மனைவி என தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio