SuperTopAds

கனடாவில் மாணவர் மானியத்துக்கு மேலதிக நிதி இல்லை- கனேடிய அரசு தெறிவிப்பு

ஆசிரியர் - Editor IV
கனடாவில் மாணவர் மானியத்துக்கு மேலதிக நிதி இல்லை- கனேடிய அரசு தெறிவிப்பு

கனடாவில் பாதீட்டிற்கு அமைய மாணவர் மானிய திட்டத்தின் மூலம், முதுநிலை மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்படலாம் என சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளார் .

இதனால் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என, உயர் கல்வி யுக்தி அமைப்பின் தலைவர் அலெக்ஸ் அஷர் அறிவித்துள்ளார்.

மேலும் பாதீட்டில் தெரிவிக்கப்பட்ட முதுநிலை கல்வி குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்தினை பகுப்பாய்வு செய்து குறித்த ஆலோசனை நிறுவனம் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மானியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடங்களில் மேலதிக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்த அமைப்பின் தலைவர் அலெக்ஸ் அஷர், கொடுப்பனவாக வழங்கப்படும் 3 ஆயிரம் டொலரை நான்காயிரத்து 200 டொலராக அதிகரிக்க 2020 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Radio