SuperTopAds

மீட்டியாகொடவில் உணவக உரிமையாளரான பெண் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
மீட்டியாகொடவில் உணவக உரிமையாளரான பெண் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு

மீடியாகொட, கிரலகஹவெல பகுதியில் அமைந்துள்ள உணவகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உணவகத்தின் உரிமையாளரான மீடியாகொட பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் காசாளர் பீடத்தில் அமர்ந்திருந்த போதே இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் படுகாயமடைந்தவரை, வைத்தியசாலையில் அனுமதித்தனர்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, மேலும் துப்பாக்கிச் சூடு நடத்த பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மகாதுர நளினின் சகோதரி மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Radio