கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் - நேற்றும் பெண்ணொருவர் கைது

கொட்டாஞ்சேனை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கொலைக்கு உதவிய பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில், கடந்த 7ஆம் திகதி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.




