காலி முகத்திடலில் நீராடிய இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

கொழும்பு - காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
நுவரெலியா - டயகமவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் இரு இளைஞர்கள் போர்ட் சிட்டி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீராடிக்கொண்டிருந்த போது, கடல் அலையில் அடித்து செல்லப்பட்டனர்.
அதனை அவதானித்தவர்கள் படகு ஒன்றின் உதவியுடன் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




