திருமலையில் அதிரடியாக இரவோடு இரவாக பெரும் பதற்றத்துக்கு மத்தியில் பொலிசாரால் அகற்றப்பட்ட புத்தர் சிலை!

திருகோணமலையில் தற்போது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குறித்த இடத்தில் விசேட பாதுகாப்பு அணியினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக நாளையதினம்(17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட குகதாசன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




