இலங்கை இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை

இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும். எனினும், இராமர் பாலத்தைச் சென்று மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்தார்.




