SuperTopAds

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு; புறக்கணித்த தமிழ் அரசுக் கட்சி !

ஆசிரியர் - Editor II
வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு; புறக்கணித்த தமிழ் அரசுக் கட்சி !

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்ற நிலையில் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு  கருத்து  தெரிவிக்கையில் .

இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில்  கலந்து கொள்வதை  தவிர்க்க  கட்சி முடிவெடுத்துள்ளது என்று அறிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நவம்பர் மாதம் 7ஆம் திகதி  நாடாளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடைவதையடுத்து இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

Radio