பல்கலை மாணவர்களை துரத்தி துரத்தி தாக்கிய குளவிகள்

பொகவந்தலாவ மோரா தோட்டத்தில் நடைமுறைப் பயிற்சிக்காக வந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் குழுவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குளவிகள் தாக்கியுள்ளது.
இதில் ஆறு மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பொகவந்தலாவ பொலிஸார் இச்சம்பவத்தைப் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




