SuperTopAds

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் அசந்து தூங்கிய ட்ரம்ப்...

ஆசிரியர் - Editor IV
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் அசந்து தூங்கிய ட்ரம்ப்...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது உறங்கிய நிலையில் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

 அதாவது முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடும் நிகழ்வொன்றின் போது ட்ரம்ப் உறங்கியதாக சர்வதேச செய்திகள் வெளியிட்டுள்ளன. 

 குறித்த சம்பவத்தைப் பயன்படுத்தி ட்ரம்புக்கு “The Nodfather” (தூக்கத் தந்தை) என கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் புதிய பட்டப்பெயரைச் சூட்டியுள்ளார். 

 மேலும் ட்ரம்ப் தூங்கிய 6 புகைப்படங்களைச் சேர்த்து, புகழ்பெற்ற “The Godfather” திரைப்பட புகைப்படத்தைப் போல வடிவமைத்து, எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார். 

 எனினும் ட்ரம்ப் உறங்கவில்லை என வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio