SuperTopAds

கொழும்பில் ஒட்டி பிறந்த குழந்தைகள்

ஆசிரியர் - Editor II
கொழும்பில் ஒட்டி பிறந்த குழந்தைகள்

கொழும்பு, மகளிர் வைத்தியசாலையில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளது.

பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தலா 2.2 கிலோ கிராம் எடை கொண்ட நிலையில் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன.

இரட்டை குழந்தைகளும் அவற்றின் வயிற்றுப் பகுதியால் இணைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு மூன்று மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரிப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

வைத்தியசாலைகளில் இரட்டையர்கள் பிறப்பு அசாதாரணமானது அல்ல என்றாலும், அண்மைய வரலாற்றில் கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட முதல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பிறப்பு இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio