SuperTopAds

ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் - கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் அரசின் அதிரடி தீர்மானம்

ஆசிரியர் - Editor IV
ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் - கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் அரசின் அதிரடி தீர்மானம்

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு தெரிவிக்கின்றன.

 நயாகரா பிராந்தியத்தில் நடைபெறும் G7 நாடுகள் குழுவின், வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும், யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் இணையத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்போர் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். 

 குறித்த தடைகளை தவிர்க்கும் நோக்கில் ரஷ்யா பயன்படுத்தும் மறைமுகக் கடற்படையையும் (shadow fleet) இலக்கு வைத்து தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 அத்தோடு, ரஷ்யா மீண்டும் யுக்ரைனின் மின்சார வலையமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் , G7 வெளிநாட்டு அமைச்சர்கள்,யுக்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடமிருந்து நேரடி விளக்கத்தை கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த தாக்குதல்களின் விளைவாக, யுக்ரைனில் தொடர்ச்சியான மின்வெட்டு நிலைமைகள் உருவாகி உள்ளன. 

 குளிர்காலம் நெருங்கும் நிலையில், அமெரிக்கா தலைமையிலான தூதரக முயற்சிகள் ஸ்தம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

 இந்த இரண்டு நாள் மாநாட்டில் அவுஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளையும் கலந்துகொள்ளுமாறு அனிதா ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். 

 மாநாட்டில் பங்கேற்கும் உயர் மட்ட தூதர்கள், முக்கிய கனிமங்கள், ஆற்றல் பாதுகாப்பு, மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போன்ற விடயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளனர்.

Radio