கம்பளை – கண்டி வீதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதி, பின்னர் வீடொன்றின் மதில் மீது மோதி நின்றுள்ளது.
குறித்த விபத்தில் வீதியில் நின்ற ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




