SuperTopAds

வரலாற்றை மீண்டும் எழுப்பும் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்...

ஆசிரியர் - Editor IV
வரலாற்றை மீண்டும் எழுப்பும் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்...

கலைநேர்த்தி, மர்மம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் (Orient Express) தொடருந்து, அதன் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக 2027 ஆம் ஆண்டு மீண்டும் பயணத்தைத் ஆரம்பிக்கவுள்ளது. 

 இது முதன்முதலில் 1883 ஆம் ஆண்டில் பாரிஸில் இருந்து வியன்னா வரை பயணித்தது. பின்னர் அதன் வழித்தடம் இஸ்தான்புல் வரை நீடிக்கப்பட்டது. 

அகதா கிறிஸ்டியின் உலகப் புகழ்பெற்ற நாவலான Murder on the Orient Express மூலம் இது அழியாத புகழைப் பெற்றது. 

 மேலும் கலை அலங்காரத்தின் நூற்றாண்டு நினைவைக் குறிக்கும் வகையில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒரு கண்காட்சியில், அதன் புதிய வடிவமைப்பு குறித்த முன்னோட்டக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 இந்நிலையில் 2027 இல் மீண்டும் பயணத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள குறித்த தொடருந்தின் உட்புறங்கள் மிகுந்த கவனத்துடன் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

 இது அதன் பாரம்பரிய நேர்த்தியை மீட்டெடுக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில், தற்போது அந்த அனுபவத்தைப் பெற விரும்பும் செல்வந்தர்களுக்காக, இத்தாலியில் "லா டோல்ஸ் வீடா" (La Dolce Vita) என்ற ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடருந்து இயங்கி வருகிறது. 

 இது டஸ்கனி மற்றும் சிசிலி வழியாக ஒரு ஆடம்பரமான மாற்றுப் பயணத்தை வழங்குகிறது.

Radio