பிபிசி செய்தி நிறுவனத்தின் பணிப்பாளர்,செய்தி முகாமையாளர் பதவி விலகல்

பிபிசி செய்தி நிறுவனத்தின் பணிப்பாளர் Tim Davie மற்றும் செய்தி முகாமையாளர் டெபோரா ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில் பனோரமா ஆவணப்படம், பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பதவி விலகல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதவிவகித்தTim Davie தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் பக்கச் சார்பு குற்றச்சாட்டுகளால் அழுத்தத்தை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், தி டெலிகிராப் நேற்று கசிந்த பிபிசி உள் குறிப்பின் விபரங்களை வெளியிட்டது.
தொடர்ந்து , அவர் பதவி விலகியுள்ளதுடன், அவருடன் செய்தி முகாமையாளரும் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.




