SuperTopAds

சீனாவின் புதிய முயற்சி -அமெரிக்காவுக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படுகின்றது...

ஆசிரியர் - Editor IV
சீனாவின் புதிய முயற்சி -அமெரிக்காவுக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படுகின்றது...

சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான ஃபுஜியன் (Fujian) நேற்று (07.11.2025) உத்தியோகபூர்வமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன் நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வார தொடக்கத்தில் ஹைனான் தீவில் உள்ள துறைமுகத்தில் குறித்த கப்பலை பார்வையிட்டிருந்தார்.

ஃபுஜியன் (Fujian) சீனாவின் மூன்றாவது மற்றும் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலாகும், இதில் மூன்று வகையான விமானங்களை ஏவக்கூடிய மின்காந்த கவண்கள் உள்ளதாக சீன ஊடகங்கள் அறிவித்துள்ளன.

மேலும் EMALS எனப்படும் புதிய தொழில்நுட்பம், விமானங்கள் அதிக ஆயுதங்களை சுமந்து செல்ல அனுமதிக்கிறது. இதனால் அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளைத் தாக்க முடியும் எனவும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

சீனா வடிவமைத்துள்ள குறித்த கப்பல் அமெரிக்காவிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio