SuperTopAds

இந்தோனேசியாவில் மத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு - மக்கள் பதற்றம்

ஆசிரியர் - Editor IV
இந்தோனேசியாவில் மத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு - மக்கள் பதற்றம்

இந்தோனேசியாவில் இன்று மத வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 50க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இது இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் கலபா கார்டிங் பகுதி உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தில் இடம் பெற்றுள்ளது. 

மேலும் இச்சம்பவம் அருகில் இருந்த பாடசாலையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது பாடசாலை மாணவர்கள் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. 

 இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Radio