பசுபிக் கடல் வழியாக போதைப் பொருள் ஏற்றிச் சென்ற படகு மீது தாக்குதல்

பசுபிக் கடல் வழியாக சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்தி சென்ற படகு மீது அமெரிக்கா இன்று ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் 67 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பசுபிக் கடல் வழியாக சர்வதேச கடல்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த படகு மீது இந்த ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




