SuperTopAds

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

ஆசிரியர் - Editor IV
யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

உகாண்டாவில் பிறந்து, தென் ஆப்பிரிக்காவில் பள்ளி படிப்பை படித்து நியூயார்க் நகரில் வளர்ந்தவர்.

இந்திய – அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகன். இவரது தந்தை கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி.

2018ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகன் ஆனார்.

தெற்காசியாவில் இருந்து, உகாண்டா பின்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர்.

தீவிரமாக சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஃபோர்க்ளோஷர் கவுன்சிலராக இருந்தார்.

நிதி நெருக்கடியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்து மக்களுக்கு போதிய உதவிகளை செய்து வந்தார்.

இதன் தொடர்ச்சியாக அரசியலுக்குல் அடியெடுத்து வைத்தார்.

நியூயார்க் மாகாண சட்டமன்றத்தில் முதல் சோஷலிச பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார்.

நியூயார்க் நகரின் மேயர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலுக்கு நடைபெறும் முதன்மை போட்டியில் அனைவரையும் தோற்கடித்து ஆச்சரியம் அளித்தார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக நியூயார்க் நகர மேயராக தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

Radio