கனடாவும் - பிலிப்பின்ஸும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டுள்ளது

கனடாவும் பிலிப்பின்ஸும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் தென்சீன கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பிலிப்பின்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடோரோ ஜூனியர் மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கிண்டி ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
குறித்த இரு நாடுகளின் இராணுவப் படைகளுக்கும் இடையே கூட்டுப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்று பிலிப்பின்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




