ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 7 பேர் உயிரிழப்பு 150 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.
மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் காயமடைந்தகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஒட்டி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ப்ளூ மசூதிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இடம் இஸ்லாத்தின் நான்காவது கலீபாவும் நபிகள் நாயகத்தின் மருமகனுமான ஹஸ்ரத் அலியின் அடக்கம் செய்யப்பட்ட இடம் என கூறப்படுகிறது.




