SuperTopAds

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு...

ஆசிரியர் - Editor IV
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு...

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

 இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. 

 எனினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

 கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நில அதிர்வில் 2,200 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Radio