SuperTopAds

ஒரு மாதமாக முடங்கியுள்ள அமெரிக்க அரசு - பலகோடி இழப்புகள்

ஆசிரியர் - Editor IV
ஒரு மாதமாக முடங்கியுள்ள அமெரிக்க அரசு - பலகோடி இழப்புகள்

அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த ஒக்டோபர் 1 முதல்; அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி சட்டமூலங்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் மூடப்பட்டது.

இதனால் ஒக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க நிதியுதவி மற்றும் ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள மத்திய சுகாதார மானியங்களை நீடிப்பது உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட சட்டமூலங்களைத் தடுக்க குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர்.

இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 31 நாட்களாக தீர்வு எட்டப்படாமல் பணி நிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டொலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் பாதீட்டு அலுவலகம் இதை மதிப்பிட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 62,149 கோடிக்கும் அதிகமாகும்.

குறித்த பணிநிறுத்தம் இவ்வாறு தொடர்ந்தால் மேலும் ஆறு வாரங்களில் 11 பில்லியன் டொலர்களையும் எட்டு வாரங்களில் 14 பில்லியன் டொலர்களையும் இழக்க நேரிடும் என பாதீட்டு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது.

காங்கிரஸ் பாதீட்டு அலுவலகம் என்பது அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றத்துக்கு) பாதீடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான மதிப்பீடுகளை வழங்கும் கட்சி சார்பற்ற சுயாதீனமான கூட்டாட்சி நிறுவனம் ஆகும்.

Radio