இரகசியத்தை வெளிப்படுத்திய விஞ்ஞானிகள் - பச்சை மம்மி' மர்மம் விலகியது

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் புதைக்கப்பட்ட பதின்ம வயதுச் சிறுவனின் உடலில் அரிதான பச்சை நிறம் (Emerald Sheen) காணப்பட்டமையின் பின்னணியில் உள்ள இரகசியத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில் 1987 ஆம் ஆண்டில் வடக்கு இத்தாலியில் உள்ள போலோக்னாவில் உள்ள பழங்கால மாளிகையொன்றின் அடித்தளத்தில், 12 முதல் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி) கண்டறியப்பட்டது.
இது சிறுவனின் உடல் செப்பு (Copper) அல்லது செப்புக் கலவையாலான பெட்டியொன்றில் வைத்து அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த அசாதாரணமான பச்சை நிறத்துக்கு, உடல் வைக்கப்பட்டிருந்த செப்பு பெட்டியே காரணம் என விஞ்ஞானிகளின் கூறகின்றனர்.
இந்த செப்பு இயற்கையாகவே நுண்ணுயிர்க்கொல்லி பண்புகள் இருப்பதால், இது மம்மியின் கடினமான மற்றும் மென்மையான திசுக்கள் அழியாமல் பாதுகாக்கவும் உதவியுள்ளது.
காலப்போக்கில், உடலில் இருந்து வெளியான அமிலங்களுடன் செப்பு இரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் உருவான பொருட்கள் எலும்புகளில் உள்ள இரசாயன சேர்மங்களுடன் வினைபுரிந்து, பச்சை நிறத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவனின் உடலிலும் எலும்புகளிலும் இந்தத் தனித்துவமான பச்சை நிறச் சாயம் ஏற்பட்டதுடன், செப்பின் நுண்ணுயிர்க்கொல்லிப் பண்பு காரணமாக உடல் சிதையாமல் பாதுகாக்கப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




