SuperTopAds

மாலைத்தீவில் புகையிலை பாவனைக்கு தலைமுறை அடிப்படையில் கட்டுப்பாடு

ஆசிரியர் - Editor IV
மாலைத்தீவில் புகையிலை பாவனைக்கு தலைமுறை அடிப்படையில் கட்டுப்பாடு

மாலைத்தீவில் புகையிலைக்கான தலைமுறைத் தடை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

 அந்த வகையில் , இத்தகைய தடையை அமுல்படுத்தியுள்ள உலகின் ஒரே நாடு என்ற பெருமையையும் மாலைத்தீவு பெற்றுள்ளது. 

 மேலும் 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும். 

 இந்நிலையில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், புகையிலை இல்லாத தலைமுறையை ஊக்குவிப்பதும்" இந்தத் தடையின் இலக்காகும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 இதன்படி புதிய ஏற்பாட்டின் கீழ், 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் பிறந்தவர்கள் மாலைத்தீவுக்குள் புகையிலைப் பொருட்களை வாங்குதல், பயன்படுத்துதல் என்பவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. 

 குறித்த இந்தத் தடை அனைத்து வகையான புகையிலைப் பொருட்களுக்கும் பொருந்தும். 

 மேலும் உரிய வயதுக்குப்படாத ஒருவருக்குப் புகையிலைப் பொருட்களை விற்றால், ($3,200) அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இவற்றுடன் சுற்றுலாப் பயணிகளும் விரிவான தடைக்கு உட்பட்டவர்கள், இதில் மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வேப்பிங் பொருட்களின் இறக்குமதி, விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும். 

 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வேப் (vapes) மீதான தடை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பொருந்தும். 

 முன்னதாக, நியூசிலாந்து இத்தகைய சட்டத்தை அமுல்படுத்திய முதல் மற்றும் ஒரே நாடாக இருந்தது. 

 ஆனால், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த சட்டம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Radio