SuperTopAds

தம்பட்டம் அடிக்கும் ட்ரம்ப் - மன்னிப்பு கேட்டார் மார்க்

ஆசிரியர் - Editor IV
தம்பட்டம் அடிக்கும் ட்ரம்ப் - மன்னிப்பு கேட்டார் மார்க்

டொனால்ட் ட்ரம்பை ஆத்திரமூட்டும் வகையில் கனடா வெளியிட்ட விளம்பர காணொளி தொடர்பில், கனடா பிரதமர் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

 கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் சமீபத்தில் பிரச்சார காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. 

 குறித்த காணொளியில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன், வரிவிதிப்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

 அந்த காணொளி தொடர்பில் கோபமடைந்த ட்ரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்வதாக தெரிவித்தார். 

 இதனால், தற்போது அந்த காணொளி தொடர்பில் கனடா பிரதமரான மார்க் கார்னி, தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாகத் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

 மேலும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ட்ரம்ப் இதனை தெரவித்துள்ளார். 

 எனக்கு மார்க் கார்னியுடன் நல்ல நட்பு உள்ளது, அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். 

 அதே நேரத்தில், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடருமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தொடராது என ஒரே வார்த்தையில் பதில் கூறியுள்ளார். 

 உண்மையாகவே மார்க் கார்னி ட்ரம்பிடம் மன்னிப்புக் கோரினாரா? என்பதை தெரிந்துக் கொள்ள ஊடகங்கள் கனடா பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, கனடா அமெரிக்க வர்த்தக அமைச்சரான டொமினிக்கின் (Dominic LeBlanc) செய்தித்தொடர்பாளர், இவ்விடயம் தொடர்பில் தற்போது எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது என கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Radio