SuperTopAds

தான்சானியாவில் தேர்தல் முடிவை எதிர்த்து வெடிக்கும் போராட்டங்கள்..

ஆசிரியர் - Editor IV
தான்சானியாவில் தேர்தல் முடிவை எதிர்த்து வெடிக்கும் போராட்டங்கள்..

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. 

 குறித்த  போராட்டத்தில் இதுவரை 700 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரால் துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. 

 வன்முறை மற்றும்  போராட்டம் காரணமாக  700 பேர் வரை உயிரிழந்ததாக பிரதான எதிர்க்கட்சியான பதேமா தெரிவித்தது.

 இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 மேலும் பலியானோரின் எண்ணிக்கையை வெளியிட மருத்துவமனை வட்டாரங்கள் மறுத்துள்ளதாகவும், இதனால் உயிரிழப்புக்கள் குறித்த துல்லிய எண்ணிக்கை வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Radio