SuperTopAds

'சரோஜா' என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
'சரோஜா' என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு

'சரோஜா' என்ற தொனிப் பொருளில்  விழிப்புணர்வு   ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு

 'சரோஜா' என்ற தொனிப்பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர்  சிறுமியர் தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் அரச தனியார் பேருந்துகளுக்கு விழிப்புணர்வு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று   நடைபெற்றது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் ஆரம்பமானது.இதன் போது அங்கு காணப்பட்ட முச்சக்கரவண்டி அரச தனியார் பேரூந்துகளில் உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.இதன்போது  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கலந்து கொண்டிருந்தார்.அவருடன் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை உப பிரதேச செயலகம் சார்ந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைச்சு  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இது தவிர சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  ஏற்பாட்டிலும் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பெரிய நீலாவணை  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி கஜேந்திரன்  பங்கேற்பில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பொலிஸ் நிலைய பிரிவில் உள்ள  முச்சக்கரவண்டிகள் வரவழைக்கப்பட்டு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டன.

Radio