SuperTopAds

174 ஆண்டுகளுக்கு பின் ஜமைக்காவை புரட்டி போட போகும் புயல்...

ஆசிரியர் - Editor IV
174 ஆண்டுகளுக்கு பின் ஜமைக்காவை புரட்டி போட போகும் புயல்...

கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டு உள்ளன. புயல் தொடர்ச்சியாக, ஹைதியில் 3 பேரும், டோமினிகன் குடியரசு நாட்டில் ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.

ஹைதியில் 2 பேர் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள். மற்றொருவர் மேரிகாட் பகுதியில் மரம் முறிந்துவிழுந்ததில் சிக்கி பலியானார். இதனால், மெலிஸ்சா புயல் பாதிப்புகளால் ஹைதி மற்றும் டோமினிகன் குடியரசுவில் மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். மற்றொருவரைகாணவில்லை. அவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

இந்த புயலானது மணிக்கு 5 கி.மீ. என்ற வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், வடக்கு கரீபியன் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 

ஜமைக்காவில் 2 நூற்றாண்டுகளில் மிக சக்தி வாய்ந்த புயலாக மெலிஸ்சா புயல் இருக்கும் என கூறப்படுகிறது.

எனினும், சில மணிநேரங்களுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டோம் என அரசு தெரிவிக்கின்றது.

Radio