கிளிநொச்சி மாவட்டத்தில் 64 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற் செய்கை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் 64 ஆயிரம் ஏக்கரில் காலபோக நெற் செய்கை..

கிளிநொச்சி மாவட்டத்தில் 2018-2019 காலபோகத்தில் 64 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதனால் அதற்கான சகல ஆயத்தங்களையும் முற்கூட்டியே மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.

2018-2019ம் ஆண்டிற்கான காலபோக நெற் செய்கை தொடர்பில் நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற முன் ஆயத்தக் கலந்துரையாடலில் கருத்துரைக்கும்மோதே மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

எதிர்.வரும் காலபோகத்திற்காக விதைப்புக்கள் செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி முதல் விதைப்புக்கள் எதிர் பார்க்கப்படுகின்றன. இவ்வாறு மேற்கொள்ளும் விதைப்புகளின் ஏற்பாடுகளை இந்த ஆண்டு முற்கூட்டியே திட்டமிட்டு உரிய திணைக்களங்கள். 

அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து உடன் தகவல்களைப் பெற்று அவர்களிற்கான நேவைகளை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகளை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாவட்டத்தில் 64 ஆயிரம் ஏக்கர் நிலம் விதைக்கப்படுவதற்கு கண்டிப்பாக 8 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் வேண்டும். இவற்றினை ஒரே தடவையில் இறக்குமதி செய்வதென்பது மாவட்டத்தினால் முடியாத காரியம். அதேபோல் நாட்டின் சகல மாவட்டத்தின்  தேவையை ஒரே தடவையில் இறக்புவதும் அரசினால் முடியாத காரியமாகவே இருக்கும். 

அவ்வாறு ஒரே தடவையில் ஏற்பாடு செய்தாலும் நிதி நிலமையும் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் இதனை தற்போதே திட்டமிட்டு விதைப்பு , பயிர் , காய் காலத்திற்கு ஏற்ப உரத்தை தருவிப்பதன் மூலம் இந்த நெருக்கடியினையும் தவிர்க்க முடியும் உரிய காலத்தில் உரத்தினையும் பெற முடியும்.

எனவே உடனடியாக முதல் கட்டமாக விதைப்பிற்குரிய அடி உரத்தின் தேவையான அளவின் விபரத்தினை அனுப்பி அதனைப் பெற்று களஞ்சியப்படுத்தும் செயல்பாட்டினை கமநல சேவை திணைக்களங்கள் மேற்பொள்வதோடு அவை விநியோகிக்கப்படும் காலத்தில் 2ம் கட்ட உரத்தினையும் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு தற்போதே திட்டமிடுவதன் மூலம் காலபோகத்தில் விவசாயிகளிற்கு இடையூறு இன்றி பசளை விநியோகத்தை மேற்கொள்ள முடியும். குறித்த பணிகளில் ஏதும் நடைமுறை பிரச்சணை ஏற்பட்டால் உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். என்றார்.

மேற்படி கலந்துரையாடலில் நீர்ப்பாசணத் திணைக்களம் , கம நலசேவைத் திணைக்களம் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு