SuperTopAds

சத்திரசிகிச்சையின் போது இசைக்கருவி வாசித்த நோயாளி-மனதை நெகிழவைக்கும் காணொளி

ஆசிரியர் - Editor IV
சத்திரசிகிச்சையின் போது இசைக்கருவி வாசித்த நோயாளி-மனதை நெகிழவைக்கும் காணொளி

நோயாளி ஒருவர் சத்திர  சிகிச்சையின் போது இசைக்கருவி வாசித்த சம்பவம்  தற்போது சமூக வலைத்தளங்களில்வைரளாகியுள்ளது .

அந்த வகையில் மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஒரு நோயாளி கிளாரினெட் வாசிப்பதால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சையின் தாக்கத்தை உடனடியாகக் கேட்க முடிகிறது, ஏனெனில் அவரது விரல்களை நகர்த்தும் திறன் வைரலாகி வரும் சம்பவம் தொடர்பான காணொளியில் தெளிவாக பார்க்க முடிகின்றது .

இது  சம்பவம் லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த டெனிஸ் பாக்கன் என்ற நபருக்கு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த அறுவை சிகிச்சையின் போதே குறித்த நோயாளி இசைக்கருவியை வாசித்துள்ளமையானது பார்ப்பவர்களை நெகிழ வைப்பதாக இருக்கும் அதே நேரம் அறுவை சிகிச்சையின் போது எந்தவொரு பதற்றமுமின்றி குறித்த நோயாளி இசைக்கருவி வாசித்த காட்சி அதிர்ச்சிக்குரியதாகவும் இருக்கிறது .

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்களுடன் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

Radio